திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளிகிருஷ்ணா ஆகியோர் பரிசீலித்தனர். அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது:- சபரிமலைக்கு மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறதா? அதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும்.
நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் சபரிமலை செல்லும் வழிகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு பஞ்சம் ஏற்படக்கூடாது. இதை தேவசம் போர்டு செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இதை உதவி பொறியாளர்கள் அடிக்கடி சரிபார்த்து, செயற்பொறியாளரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.