சென்னை: ஆன்மீகம் என்பது இந்திய மக்களின் பண்பாட்டுடன் இரண்டற கலந்து ஒரு விஷயம். ஆன்மிகத்துக்கு பல முகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று கோவில் வழிபாடு.
இருக்கும் இடத்தில் இருந்து பூஜை செய்ய முடியாதவர்களுக்கு கோயில் ஒரு வரப்பிரசாதாம் ஆகும். அங்கு சென்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா!
கண்டிப்பாக தலைக்கு குளித்துவிட்டு, அசுத்தமின்றி, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தனம் வைத்துதான் தரித்துதான் கோயிலுக்கு செல்லவேண்டும். வெறும் நெற்றியுடன் செல்லவே கூடாது.
கோயிலில் காணப்படும் கொடி மரத்தை தொட்டு வணங்க கூடாது. கொடிமரத்துக்கு பின்னால் மட்டும் தான் கீழே விழுந்து வணங்கலாம். கோயிலில் சன்னதியில் இறைவனை தரிசனம் செய்யும் போது முதலில் பாதத்தை தரிசனம் செய்து மனதில் நிறுத்தியபின், முகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
பூ, சந்தனம், விபூதி போன்ற பிரசாதங்களை இரு கை நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். அவை நம் கை விட்டு கீழே சிந்தாமல், சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படி ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தெரிந்து செய்யும் பல காரியங்களால் நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.