கும்பகோணம் : பாபநாசம் அருகே ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய
மண்டல அபிஷேக நிறைவு நாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பெருமாள்கோவில் சந்தானபுரம் பகுதியில் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ சக்திகணபதி, ஸ்ரீசக்தி முருகன், ஸ்ரீ மகாகாளி அம்மன், பேச்சியம்மன், ஸ்ரீமாரியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றது.
இக்கோவிலில் 33 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் மண்டல அபிஷேக நிறைவு தினத்தை முன்னிட்டு யாக பூஜைகள் நடைபெற்று மகாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சந்தானபுரம் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சந்தானபுரம் கிராம மக்கள் அம்பேத்கர் இளைஞர் பொதுநல மன்றம் மகளிர் சுய உதவி குழுவினர் செய்திருந்தனர்.