கரூர்: கரூரில் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பக்த அபய கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநகர் பகுதி அமைந்துள்ள ஸ்ரீ பக்த அபய கோதண்டராம சன்னதி கோவிலில் ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ஸ்ரீராமர் அவதரித்தார். ஸ்ரீராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்களுக்கு ஒரு விரத முறையாகவும். ஸ்ரீராமர் பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு ஸ்ரீ ராம நவமியாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ஸ்ரீராம நவமி விரதத்தை இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும்.
இதற்கு “கர்ப்போஸ்தவம்” என்றும் சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாம் வகை இதற்கு “ஜன்மோதீஸ்வம்” என்று பெயர். சில ஆண்டுகளாக இந்த விழா பங்குனி மாதத்திலும் வருகிறது.
இதன் வழிமுறையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த அபய கோதண்ட ராம சன்னதி கோவிலில் சிறப்பாக ராமநவமி விழா நடைபெற்றது. மூலவருக்கு பால்,தயிர்,திருமஞ்சனம், மஞ்சள்,சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வாய்ந்த கிருஷ்ண கமலப் பூ துளசி மாலைகளால் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.