திருப்பதி: வாட்ஸ் அப் மூலம் தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசிக்க வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் வசதியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பெறப்படும் டிக்கெட்டுகளை பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு தரிசன கவுண்டரில் காண்பித்து தரிசனம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்காக 9552300009 என்ற அரசு வாட்ஸ் அப் எண்ணில் விவரங்களைத் தெரிவித்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம்.