மேஷம்: எல்லாவற்றுக்கும் பிறரை குறை சொல்லாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்மீகம், தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பண வரவு இருக்கும்.
ரிஷபம்: வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். மனைவி மூலம் உறவினர்கள் மூலம் லாபம் அடைவீர்கள். தொண்டை வலி, வயிற்றுவலி வந்து நீங்கும்.
மிதுனம்: புதிய நபர்களால் லாபம் உண்டாகும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தேவையில்லாத குழப்பம் நீங்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: உறவினர், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர மரியாதை இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

கன்னி: குடும்பத்தில் சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகள் காரணமாக வெளியூர் பயணமும், அலைச்சல்களும் ஏற்படும். வாயுத் தொல்லை, ஜலதோஷம் வந்து நீங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்: விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களுடன் வந்து தங்குவார்கள். தேவையற்ற செலவுகளால் உங்களின் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கடன்கள் வசூலாகும். உங்களிடம் வருபவர்களுக்கு உதவுவீர்கள்.
விருச்சிகம்: வீண் கவலைகள், குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். கணவன்-மனைவி இடையே உறவு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
தனுசு: தடைகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கிச் செல்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்த உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். நகைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை கவனமாக கையாளவும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்: கணவன்-மனைவி இடையே மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். கடன்கள் நீங்கும். திடீர் பணவரவு இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
மீனம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.