மேஷம்: எதிர்காலத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பொருட்களை விற்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
ரிஷபம்: பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.
மிதுனம்: அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இணக்கமாகச் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் பணிகளை முடிக்க சிரமப்படுவீர்கள். அமைதியை பேணுங்கள்.
கடகம்: தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நிறைவேறும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகப் பயணம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் செழிக்கும்.
சிம்மம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் வேலையில் நிம்மதி இருக்கும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் மறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
துலாம்: விடாமுயற்சியுடன் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். தம்பதியருக்குள் இருந்த ஈகோ பிரச்சனைகள் தீரும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: மனதில் புதிய யோசனைகள் வரும். உங்கள் முகம் ஜொலிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் முதல் முதலீடு இரட்டிப்பாகும். அலுவலகத்தில் போட்டிகள் குறையும்.
தனுசு: நிதானமாகப் பேசி பணிகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்களின் சேமிப்பை வெளியேற்றுவார்கள். வியாபாரத்தில் பழைய பொருட்கள் குவியும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். மேலதிகாரிகளிடம் வெறுப்பு கொள்ளாதீர்கள்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தாமதமாகி வந்த அரசுப் பணிகள் முடிவடையும். குடும்பத்துடன் சென்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
மீனம்: மூதாதையர் சொத்து பிரச்சனைகள் தீரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கூட்டு முயற்சியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். தொழில் வெற்றிகரமாக அமையும்.