உத்தரகண்ட் : உத்தரகண்டில் உள்ளகேதார்நாத் கோயில் வரும் மே 2ல் திறக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் மினி சார்தாம் என அழைக்கப்படுகின்றன. இமயமலையில் அமைந்துள்ள இந்த கோயில்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடையில் திறக்கப்படும்.
இந்த ஆண்டு கேதார்நாத் கோயில் நடை மே 2ஆம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படுகிறது. பத்ரிநாத் கோயில் மே 4 அன்றும், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில் அக்ஷய திருதியை நாளான ஏப்.30 அன்றும் திறக்கப்படுகிறது.
இவ்வாறு கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலுக்கு ஆண்டுதோறும் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.