கேரளா: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி பெற்றவர்களும் ஒரே நேரத்தில் வருவதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பேர் வரை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்பாட் புக்கிங் செய்ய நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவியும் நிலையில் 10 முதல் 12 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கூட்ட நெரிசலால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இரவு 12 மணி அளவில் ஸ்பாட் புக்கிங் முன்பதிவு செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.