திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமி வருகிற 4-ந் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி 5-ந் தேதி இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் நின்று கொண்டு விபூதி பூசி, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வது போன்று பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.