
திருப்பதி: பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மூலஸ்தான பத்மாவதி தாயார் மேள தாளத்துடன் கொடி மரத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பின்னர், வேத பண்டிதர்களால் வேதமந்திரங்கள் முழங்க, தங்கக் கொடி மரத்தில் உச்சி வாத்தியங்களுடன் பிரம்மோத்ஸவக் கொடி ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவத்தையொட்டி, ஆந்திர அரசு சார்பில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனம் ராம் நாராயண ரெட்டி, அன்னைக்கு பட்டு வஸ்திரங்களைத் தலையில் சுமந்து பிரசாதமாக வழங்கினார்.

கொடியேற்றத்தை தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு பத்மாவதி தாயார் சிறிய வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.