சென்னை: நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் கரிகாலா திரைப்படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிக்மா படத்தைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிக்கும் 33-வது திரைப்படமாக கரிகாலா உருவாகிறது. உகந்தர் முனி இயக்கும் இப்படத்தை ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கற்பனை மற்றும் சாகச அம்சங்கள் நிறைந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் வகையில் இப்படம் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாகம் 2027 ஜூலை 2ஆம் தேதியும், இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சந்தீப் கிஷன் நடித்த சிக்மா படத்தில் ஒரு பாடலுக்கு கேத்ரின் தெரசா நடனமாடியிருந்தார். தற்போது அவர் கதாநாயகியாக இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
