நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் தீபாவளி புரமோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புரமோவில் இடம்பெற்ற காட்சிகளுக்கு பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக சிம்புவின் தோற்றம், காட்சியமைப்பு மற்றும் படத்தின் பின்னணி உலகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால் அதே புரமோவில் இடம்பெற்ற புதிய இசைத் தீம் குறித்து ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், வெளியான இசை ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் படத்தின் முழுமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெளியாகாத நிலையில், புரமோவை மட்டுமே வைத்து இறுதி முடிவுக்கு வர முடியாது என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
