நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் புதிய காட்சித் தொகுப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சூர்யா, டிஎஸ்பி இன்பராஜ் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
வெளியிடப்பட்டுள்ள புதிய காட்சிகளில் முகத்தை மறைத்த தோற்றம், காவல்துறை விசாரணைச் சூழல் மற்றும் சமூக வலைதளங்களில் காணொளிகளைப் பயன்படுத்தும் விதம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வழக்கமான கதாநாயகன் பாணியைத் தாண்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மலையாளத்தில் தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்ற ஜித்து மாதவன், இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நஸ்ரியா நசீமும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் விளம்பரக் காட்சிகள் அடுத்தடுத்துத் வெளியாகி வரும் நிலையில், கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
