தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவுக்கான முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்குப் பணிவிலகல் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிட்ட அணிகளின் துணைத் தலைவர் நிலைக்குக் கீழுள்ள ஊழியர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறக்கூடும். இருப்பினும், தரவுமையங்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட சில பிரிவுகள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை விரிவுபடுத்தும் நிறுவனங்கள், தங்களது பணியாளர் அமைப்பு மற்றும் செலவினங்களையும் மறுசீரமைத்து வருகின்றன. இதனால் தொழில்நுட்பத் துறையில் பணியாளர்களின் எதிர்காலம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இந்தச் சலுகை அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயப் பணிநீக்கம் என்று பொருளல்ல. தகுதி, விதிமுறைகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யும் முடிவுகள் அடிப்படையில் திட்டம் அமையும்.
