நடிகர் சூர்யா நடிக்கும் சீன் திரைப்படத்தில் மலையாள நடிகர் நஸ்லென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
உணர்வுகளை வெளிப்படுத்தாத, அச்சமூட்டும் மனிதராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவின் அறிமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மலையாளத்தில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நஸ்லென், தமிழில் அறிமுகமாகும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே வெளியான ‘ஏரோபிளேன்’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், நஸ்லெனின் கதாபாத்திர அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
