‘ஜெயிலர் 2’ படத்தின் வழக்கமான பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பதிலாக வித்தியாசமான புரமோஷன் திட்டத்தை படக்குழு கையில் எடுத்துள்ளது.
ரஜினிகாந்த் சன் டிவியில் சுமார் 3 மணி நேரம் நீளும் சிறப்பு பேட்டியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 11-ம் தேதி ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு நீண்ட நேரம் சூப்பர் ஸ்டாரை பார்க்கும் வாய்ப்பு என்பதால் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
