சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்துக்கு UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், படத்தின் ஓட்ட நேரம் சுமார் 165 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட முதல் பாக நடிகர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரின் கேமியோ தோற்றங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வழக்கமான ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பதிலாக, ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை அக்டோபர் 9-ம் தேதி Sun NXT-ல் ஒளிபரப்ப தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளதால், ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
