ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் ரசிகர்களை கவர்ந்த டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் களமிறங்குகிறார்.

இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகளும், நட்சத்திர பட்டாளமும் அதிகரித்திருப்பது டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.
டிரெய்லர் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
