சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1986-ஆம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ திரைப்படத்துக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சிறப்புத் தோற்றம் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
