ஐதராபாத்: இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
‘பிரேமலு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாக பணிகளில் கிரிஷ் ஏ.டி. ஈடுபட்டிருந்தார். ஆனால் கதையில் திருப்தி ஏற்படாததால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அவர் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பகத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ‘மாந்திரீகம்’ ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாக டிரெய்லர் மூலம் தெரிகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.
