சென்னை: உத்ரா புரொடக்ஷன்ஸ், டி.ஜே. இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இப்படம் பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதையாக உருவாகி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை வயதான பாட்டியும் சிறுவனும் கையில் ஏந்தியபடி நிற்கின்றனர். அவர்களைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம் மற்றும் பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்த பெட்டியை நோக்கி பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பழமையான வீடு, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட அம்சங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளதால், குடும்ப பின்னணியில் திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதையாக படம் உருவாகியிருப்பதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
