நடிகை ஸ்ருதிஹாசன் தனது ஆரம்பகால திரையுலக வாழ்க்கையில் மேற்கொண்ட மூக்கு அறுவை சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அறுவை சிகிச்சை தொடர்பான அனுபவங்களை மறைக்காமல் பேசுவது முக்கியம் என்றும், உண்மையை மறைத்தால் அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
திரையுலகில் தோற்றம் தொடர்பான அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் நிலையில், தனது தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்தது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
