சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதனால் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ. ரியாஸ் கே. அகமது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

‘தர்மன்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், ரஜினி–இயக்குநர் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் சில நாட்களாக சுற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
