சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரான ‘சஞ்சய் விஸ்வநாத்’ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த குடும்பப் படமாக இது அமைந்துள்ளது.
படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தியும் படத்தைப் பாராட்டி, அழகான கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்பான நடிப்பு இடம்பெற்றுள்ளதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
