சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘ராஜன் வகையறா’ திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் தற்போது சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் ‘ராஜன் வகையறா’ படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படத்தில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தின் இளமைக்கால வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமீர் மற்றும் கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இதன் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் சாய் அபயங்கர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள ‘தமிழ்முருகன்’ படத்திலும் வெற்றிமாறன்–சாய் அபயங்கர் கூட்டணி இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
‘வடசென்னை’ படத்தின் பின்னணியுடன் தொடர்புடைய கதை என்பதால் ‘ராஜன் வகையறா’ படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
