ஐதராபாத்: நடிகர் பிரபாஸ் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சமூக வலைதள சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். தற்போது ‘பௌசி’ திரைப்படத்தின் புகைப்படத்தை தனது புதிய டி.பி.யாக வைத்துள்ளார்.
‘பாகுபலி’ படத்தின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்த சுயவிவரப் படத்தை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பிரபாஸ், தற்போது அதனை மாற்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் ‘பௌசி’ படத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
‘பௌசி’ படத்தின் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தப் படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் டி.பி.யாக வைத்துள்ளார்.
இந்த மாற்றம் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘பௌசி’ திரைப்படம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
