சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 9 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யாவின் 46-வது படமாக உருவான இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘பட்டாம்பூச்சி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குடும்பப் பின்னணியிலான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர் வசூலை கடந்த சூர்யாவின் முதல் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
