சென்னை : விடாமுயற்சி படத்தின் போது ஏற்பட்ட விபத்திற்காக அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். அஜித் எப்பொழுதும் தன்னுடன் பணியாற்றுபவர்கள் மீது தனி அக்கறை கொண்டிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது.
இதில் நடிகர் ஆரவ் காயமடைந்தார். இது குறித்து பேசி இருக்கும் ஆரவ், “விபத்துக்கு பிறகு அஜித் என்னை தனியாக விடவில்லை. மருத்துவமனைக்கு வந்து ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துவிட்டு நிம்மதி அடைந்தார். பிறகு என்னை கட்டி அணைத்து விபத்துக்காக மன்னிப்பு கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் பற்றி வெளியாகும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற 6ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியில் அஜித் மற்றும் ஆரவ்-க்கு நடந்த விபத்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது.