திருமலை: ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 4-ம் தேதி புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அல்லு அர்ஜுனை சிக்கடப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு, நாமப்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அல்லு அர்ஜுன் வீடியோ மூலம் நீதிபதி முன் ஆஜரானார். அப்போது அல்லு அர்ஜுனுக்கு நிரந்தர ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். ஏற்றுக் கொண்டார்கள். அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.