சென்னை: பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன், நீதிபதி மகனை தாக்கிய வழக்கில கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேர் கிழக்கில் கார் நிறுத்தியது தொடர்பான தகராறில் நீதிபதி மகன், பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், நீதிபதியின் மகனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கார் பார்க்கிங் தகராறில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தர்ஷன் கொடுத்த புகாரின் பேரில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இருதரப்பினரிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.