கேரளா: நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்க வந்த தன்னை ஓட்டலுக்கு வரவழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை புகார் அளித்திருந்தார்.
சித்திக்கிற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.