சென்னை : இளையராஜா அனுப்பிய நோட்டீசுக்கு குட் பேட் அக்லி தயாரிப்பாளர் பதிலடி கொடுத்து இருக்கிறார். “யாரிடம் அனுமதி வாங்க வேண்டுமோ, அவரிடம் வாங்கி விட்டோம்” என தயாரிப்பாளர் ரவி ஷங்கர் கூறி இருக்கிறார்.
இளையராஜா தான் இசையமைத்த பழைய பாடல்களை அனுமதி இல்லாமல் தற்போது பயன்படுத்துவதாக கூறி படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக அவர் முன்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தற்போது அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும், பாடல்களை நீக்க வேண்டும் என இளையராஜா நோட்டீஸில் கூறி இருந்தார்.
இந்த சர்ச்சை பற்றி குட் பேட் அக்லி தயாரிப்பாளர் பதிலடி கொடுத்து இருக்கிறார். “யாரிடம் அனுமதி வாங்க வேண்டுமோ, அவரிடம் வாங்கிவிட்டோம்” என தயாரிப்பாளர் ரவி ஷங்கர் கூறி இருக்கிறார்.
விதிகளின்படி உரிமை யாரிடம் இருக்கிறதோ அவரிடம் அனுமதி பெற்று தான் நாங்கள் பாடலை பயன்படுத்தி இருக்கிறோம் என அவர் கூறி இருக்கிறார்.