சென்னை : மணிகண்டன் நடிப்பில் வெளிவந்து வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பி வரும் குடும்பஸ்தன் படத்தில் முதலில் நடிக்க இயக்குனர் அணுகியது அசோக் செல்வனை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர், மணிகண்டன். இவர் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதில் அவருக்கு முன்னர் ஹீரோவாக நடிக்க வைக்க அசோக் செல்வனைத்தான் இயக்குநர் அப்ரோச் செய்தாராம்.
ஆனால் அவரிடம் டேட் இல்லாத காரணத்தால் வாய்ப்பு மணிகண்டனுக்கு சென்றது. ஆனால் அசோக் செல்வன் இப்படியொரு வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தப் படம் வசூலில் நன்கு கல்லாகட்டி வருவதால் கோலிவுட் வட்டாரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக மணிகண்டன் மாறியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தவற விட்டுவிட்டது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.