‘தோழர் வெங்கடேசன்’ ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பராரி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் ராஜு முருகன் வழங்கும் இந்த படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது மனிதநேயம் பற்றிய படம். கதை திருவண்ணாமலையில் நடக்கிறது.
ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரண்டு சமூகங்களின் கதையை சொல்லியிருக்கிறேன். இரு தரப்பினரும் தினக்கூலிகள். இந்த ஏற்ற தாழ்வுகள் அவர்களுக்கு எப்படி வந்தது? என்ற கேள்வியை இப்படம் எழுப்புகிறது.
திராவிட அரசியல் பற்றியும் பேசியிருக்கிறேன். இங்கிருந்து வேலைக்குச் செல்லும் மக்களை மற்ற மாநிலங்கள் எப்படி நடத்துகின்றன? மொழிவழி அரசியல் எப்படி இருக்கிறது, சக மனிதனை நேசிப்பதே அறம் என்று சொல்லியிருக்கிறோம்.
நாடகப்பள்ளியில் படித்த சுமார் 40 பேரை அறிமுகப்படுத்துவேன். அவர்களில் சிலருக்கு செங்கல்சூளை ஜூஸ் பேக்டரியில் 3 மாதங்கள் பயிற்சி அளித்தோம். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது,” என்றார்.