தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் தாங்கள் தனித்தனி வழியில் செல்வதாக அறிவித்தனர். இதையடுத்து குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் கடந்த இரண்டு விசாரணைகளிலும் இருவரும் ஆஜராகவில்லை. எனவே, அவர்கள் மீண்டும் இணையப் போவதாக கூறப்பட்டது.
தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து பாராட்டியதால் தனுஷுடனான ஐஸ்வர்யாவின் அறிமுகம் காதலாக மலர்ந்தது. முதலில் இந்த காதலுக்கு ரஜினி வீட்டில் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது; பின்னர் தனது மகளின் பிடிவாதம் மற்றும் அன்பின் காரணமாக, ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் நிம்மதியாகவும், காதலாகவும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். தனுஷின் நடை, உடை, பாவனை, பேசும் விதம் ஆகியவற்றை மேம்படுத்தியதில் ஐஸ்வர்யாவுக்கு பங்கு உண்டு. அதேபோல் மனைவிக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை உணர்ந்து ஐஸ்வர்யா இயக்கிய 3 படங்களில் ஹீரோவாகவும், வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.
சுமூகமாக நடந்து வந்த இவர்களது திருமணம் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தில் முடிந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடாததால், மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் சமீபத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இதனால் அவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் இரண்டு முறை விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. இதனால், இருவரும் இணையப் போகிறார்கள் என்று ரசிகர்கள் நம்பத் தொடங்கினர்; ரஜினி மற்றும் அவர்களது மகன்களின் எதிர்காலத்திற்காக அவர்கள் ஒன்று கூடுவார்கள். அதுமட்டுமின்றி, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சில பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உச்சகட்ட அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த முறையும் வரமாட்டார் என்று நினைத்தபோது உடனிருந்தார். ஆனால் தனுஷ் ஆஜராகவில்லை. தற்போது ஐஸ்வர்யா ஆஜராகியிருப்பதால், தனுஷுடனான விவாகரத்துதான் இறுதியானது என மறைமுகமாக சூசகமாக கூறிவிட்டாரே என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.