சென்னை: யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில் நயன்தாரா பேசியதாவது:
நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை. யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்தரமாக பேசினாலும், தப்பாக நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் நம் வேலையை உண்மையாகவும், உறுதியாகவும் செய்தால் தானாகவே தன்னம்பிக்கை வரும். அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்று நயன்தாரா கூறினார்.