கேரளா: விவாகரத்து செய்து மீண்டும் இணைந்த தம்பதி… பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், தனது மனைவியுடனான 24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து விட்டு, தற்போது மீண்டும் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவராக இருப்பவர்தான், பிரியதர்ஷன். இவருக்கும், பிரபல நடிகையான லிஸிக்கும் 1990ல் திருமணம் நடந்தது. பிரியதர்ஷன், இந்து, லிஸ்ஸி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இதுவே இவர்களது காதல் வாழ்க்கையை துவங்க முதல் தடையாக இருந்தது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரின் வீட்டிலும் இதற்கு சம்மதிக்கவில்லை.
ஆனால் போகப்போக இருவரையும் ஏற்றுக்கொண்டார்கள். பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு, கல்யாணி பிறந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்கிற ஒரு மகனுமுள்ளார். 2016ஆம் ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் பிரிந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு தெரியாது இவர்கள் மீண்டும் இணைந்து வாழப்போகிறார்கள் என்று. ஆம், இருவரும் விவாகரத்து பெற்ற பிறகும் இருவரும் தற்போது இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் பிரிந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு தெரியாது இவர்கள் மீண்டும் இணைந்து வாழப்போகிறார்கள் என்று. ஆம், இருவரும் விவாகரத்து பெற்ற பிறகும் இருவரும் தற்போது இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் பூத் பங்களா என்கிற படம், ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த ப்ரமோஷன் பேட்டியில் பிரியதர்ஷன் கலந்து கொண்டார். இதில், அவர் மீண்டும் லிஸ்ஸியுடன் இணைந்து வாழ்வது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரியதர்ஷன், தங்களின் திருமணத்திற்கு மதம்தான் முதலில் தடையாக வந்ததாகவும், குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை, பின்னர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். நாங்கள் இருவரும் 32 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், அதில் ஒரு சலிப்பும், ஈகோவும் வந்ததாகவும் கூறினார். இந்த ஈகோ பிரச்சனையால் தங்களின் உறவு ஒரு கசப்பான உறவாக மாறியதாகவும் தெரிவித்தார். இதனால், இருவரும் பிரிய முடிவெடுத்ததாக அவர் கூறினார்.