
சத்யதேவ், பிரியா பவானி சங்கர், சத்யராஜ் நடிப்பில் கடந்த மாதம் 22-ம் தேதி வெளியான படம் ஜீப்ரா. இந்த தெலுங்கு படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய ஈஸ்வர் கார்த்திக் ஏற்கனவே தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படத்தை இயக்கியுள்ளார். அவர் கூறியதாவது:-
ஜீப்ரா படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. பெண்குயின் படத்தை முடித்த பிறகு அடுத்த படத்தை வித்தியாசமான கதையாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வங்கிகளில் நடக்கும் குற்றங்கள் பொதுவாக வெளியில் தெரியாது.

அப்படி செய்தால் வங்கியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். வங்கியைப் பற்றி நான் படித்ததையும் கேள்விப்பட்டதையும் இணைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். நான் தெலுங்கில் தயாரிக்கலாம் என்று தயாரிப்பாளர் ஒருவர் கூறினார். அதனால் அங்கு சென்றேன்.
இந்தப் படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வருகின்றன. அவர்களுடன் பணியாற்ற சில நடிகர்களிடம் பேசி வருகிறேன். அடுத்த படத்தில் ஆக்ஷன் கலந்த ஜாலியான படத்தை இயக்க உள்ளேன். ஆனால் அதுவும் புதிதாக இருக்கும். இவ்வாறு ஈஸ்வர் கார்த்திக் கூறினார்.