சென்னை: ஆஸ்கர் ரேஸில் இருந்து இந்தியப் படங்கள் வெளியேறி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த வருட ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. லாப்பாட்டா லேடிஸ், ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர், புதுல், ஆடுஜீவிதம்: தி ஆடு லைஃப், ஆல் வி இமேஜின் அஸ் லைட், பேண்ட் ஆஃப் மஹாராஜாஸ், கங்குவா, தி ஸீப்ராஸ், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் மற்றும் சந்தோஷ் ஆகிய படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதில் ‘லாப்பாட்டா லேடிஸ்’ படத்தின் மீதும் இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவையும் இறுதிப்பட்டியலை எட்டமுடியவில்லை. மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதமும் ரேஸில் பின்வாங்கியுள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற சூர்யாவின் கங்குவா படமும் ஆஸ்கர் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.