சென்னை: கமல்ஹாசனின் கருப்பு கண்ணாடி மற்றும் மகேஷ் பாபுவின் டி-சர்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. ‘தக் லைஃப்’ விளம்பர நிகழ்வுக்காக கமல்ஹாசன் அணிந்திருந்த சன்கிளாஸின் விவரங்களை ரசிகர்கள் கூகிள் மூலம் தேடினர். அவர் அணிந்திருந்த தனித்துவமான கருப்பு சன்கிளாஸ்கள் ஜப்பானிய நிறுவனமான யோஜி யமமோட்டோவின் மாடல் YY7013 கண்ணாடிகள்.

இந்த கண்ணாடிகளின் விலை இந்திய ரூபாயில் 42 ஆயிரம் ரூபாய். அதேபோல், நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகனும் நடிகருமான அகிலின் திருமணத்தில் மகேஷ் பாபு டி-சர்ட் அணிந்திருந்தார். அவரைப் பார்த்த பலர், மகேஷ் பாபு அந்த டி-சர்ட்டில் எளிமையாக இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரத் தொடங்கினர்.
மற்றவர்கள் அவர் அணிந்திருந்த டி-சர்ட் பற்றிய தகவல்களையும் தேடி அதை செய்தியாக்கியுள்ளனர். மகேஷ் பாபு ஹெர்ம்ஸ் பிராண்டின் டி-சர்ட் அணிந்திருந்தார். அதன் விலை 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய். சில ரசிகர்கள் இதை முன்னிலைப்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாக்கி உள்ளனர்.