சென்னை: அரசன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா என வடசென்னை படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சமுத்திரக்கனி பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது ஏற்கனவே இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தின் கதைக்களம் நடைபெறும் போது நடக்கும் மற்றொரு கதை என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
இந்நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா என வடசென்னை படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சமுத்திரக்கனி பகிர்ந்துள்ளார். அரசன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் இருந்து நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை என பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் சிம்பு என இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் சில பிரச்னைகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் சிம்பு இரண்டு வகையான கெட்-அப் களில் இருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அப்படி இருக்கையில் முதற்கட்ட படப்பிடிப்பிலும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு முற்றிலும் வேறு வேறு கெட்-அப் களில் இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தில் செம்ம விஷுவல் ட்ரீட் இருக்கும் என்பது உறுதி ஆகி உள்ளது. அதேபோல், படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.