சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் சினிமாவுக்கு வந்ததே பாரதிராஜா படங்களை பார்த்துதான். அவர் எப்போதும் நம்ம இருவரும் சேர்ந்து படம் பண்ணணும்டா என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர் அப்பா மாதிரி இல்லை, அப்பாதான். அவர் இல்லாததை என்னால் நம்பவே முடியவில்லை” என தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். தேனி ஈஸ்வரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.