சென்னை: 2024-ல் தமிழ்நாட்டில் வெளியான மலையாள படங்களில் அதிகப்படியான வசூலை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் இதுவரை ரூ.63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள மொழி ‘திரில்லர்’ படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.
இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளிமாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ வரிசையில் இந்த ஆண்டு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், 2024-ல் தமிழ்நாட்டில் வெளியான மலையாள படங்களில் அதிகப்படியான வசூலை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் இதுவரை ரூ.63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.