சென்னை : பாலிவுட் முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தெலுங்கில் களம் இறங்குகிறார். இதற்காக அவருக்கு முப்பது கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி, மகேஸ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.
இவர் ஹாலிவுட் வரை சென்றுவிட்டதால் சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறார். இந்தப் படத்தில் நடிக்க ரூ.30 கோடி கேட்டிருப்பதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பிரியங்கா சோப்ரா நடிப்பதால் இந்தியா முழுவதும் இப்படத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால் படக்குழுவினர் பிரியங்கா சோப்ரா கேட்டுள்ள சம்பளத்தை கொடுத்து விடுவார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜமௌலியின் இந்த படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.