சென்னை: நடிகர் அஜித் நடித்து கடந்த 2000ம் ஆண்டில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
நடிகர் அஜித்.’அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், ‘ஆசை’, ‘காதல் கோட்டை’ படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2000-ல் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்துடன் மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்காக பாடகர் சங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை வென்றார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை படக்குழு ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.