நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் உதவியதற்காக நாடு முழுவதும் பிரபலமானார். படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ள அவர், சாலையோர தண்ணீர் வியாபாரி ஒருவரிடம் நலம் விசாரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தண்ணீர் வியாபாரிகளுக்கு நீலகண்டன், ராணி, வாசுதேவன் என்று பெயர் சூட்டும் சோனு சூட், ‘நல்லா இருக்கீங்களா?’ என்று தமிழில் கேட்கிறார்.
அப்போது அவர், சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அமைப்புசாராத் துறையில் உள்ள வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.