சென்னை: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரில் ஐசரி கணேஷ் தயாரித்து, எஸ்.பி.ஹோசிமின் எழுதி இயக்கியுள்ள படம் ‘சுமோ’. நாளை திரைக்கு வரவுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், வி.டி.வி கணேஷ், சதீஷ், யோகி பாபு மற்றும் ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அவர் 170 கிலோ எடையுள்ளவர். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் பற்றி மிர்ச்சி சிவா கூறும்போது, ‘டோக்கியோவில் இருந்து சென்னைக்கு தவறுதலாக வரும் சுமோ மல்யுத்த வீரர் என்னை சந்திக்கிறார். இருவரும் வி.டி.வி கணேஷ் நடத்தும் ஹோட்டலில் பணிபுரியும் போது காதல் பந்தம் உருவாகிறது.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.’ யோஷினோரி தஷிரோ, ‘எனக்கு தமிழ் தெரியாது. “யாராவது ஏதாவது சொன்னால், அதைக் கேட்டு, உள்வாங்கி, அதற்கேற்ப நடிக்கிறேன். 170 கிலோ எடையுடன், இந்தியாவில் சல்மான் கான் உள்ளிட்டோருடன் விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் படம் ‘சுமோ’. குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாகியுள்ளது,” என்றார்.