சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா தயாரிப்பு நிறுவனம், நேற்று இன்று நாளை இயக்குனர் ஆகிய 3 பேரும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் இணையவுள்ளனர். மகாராஜா படத்தை ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது. ஆனால் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மட்டும் தயாரிக்கிறது.
இந்த புதிய படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் இயக்கவுள்ளார். விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வெறும் 30 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இப்படத்தை இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆனது. 92 கோடிகள் அந்த நாட்டில் மட்டும் வசூலித்தது.
நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா தயாரிப்பு நிறுவனம், நேற்று இன்று நாளை இயக்குனர் ஆகிய 3 பேர் இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.