சென்னை: தேர்தலுக்கு முன்பாக வெளியாகிறது டிஎன் 2026 திரைப்படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள நகைச்சுவைப் படம் ‘டிஎன் 2026’. இப்படம் வரும் 10ம் தேதி தேர்தலுக்கு முன்னதாக வெளியாகிறது.
இப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறார் உமாபதி ராமையா. இப்படத்தில் நடிகர் நட்டி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.